முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிரத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப் 29:

மகராஷ்டிர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இது தொடர்பாக அந்த மாநில கவர்னர் சி.வி. ராவ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருப்பதால் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் கூடியது. இதில் மகராஷ்டிர மாநில கவர்னர் அனுப்பிய அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் மகராஷ்டிர மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் விலக்கி கொண்டதை தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என்று கவர்னர் அளித்த அறிக்கையை ஏற்று கொள்வதென அமைச்சரவை முடிவு செய்தது. இதையடுத்து இந்த அறிக்கையை ஏற்று ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதிக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதன்படி மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகராஷ்டிரத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்