முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உமாபாரதி மன்னிப்பு கோரினால் வழக்கை திரும்ப பெறுவேன்

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

போபால், செப் 29:

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டால் அவர் மீதான அவதூறு வழக்கை திரும்ப பெற தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜயசிங் கூறினார்.

கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது ரூ. 15 ஆயிரம் கோடி அளவுக்கு திக்விஜயசிங் ஊழலில் ஈடுபட்டதாக உமாபாரதி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக உமாபாரதி மீது திக்விஜயசிங் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் திக்விஜயசிங் ஆஜரானார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூ றுகையில், நீதிமன்றத்தில் உமாபாரதி என்னிடம் மன்னிப்பு கேட்டால் அவர் மீது நான் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை வாபஸ் பெற்று விடுவேன். உமாபாரதி என் மீது ரூ. 15  ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் புகார் கூறியிருந்தார். ஆனால் நான் 1 5 ரூ பாய் ஊழல் செய்ததாக கூட அவரால் நிரூபிக்க முடியாது என்று திக்விஜயசிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்