முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் இந்துத்துவ கொள்கைகள் மீது சிவசேனா தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப் 29:

தனது முன்னாள் கூட்டணி கட்சியான பாஜகவை மறைமுகமாக தாக்கும் விதமாக இந்துத்துவ கொள்கைகளை நிலைநிறுத்தியவர் பால்தாக்கரே மட்டுமே. மற்ற கட்சிகள் அதை அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன என்று சிவசேனா தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் பத்திரிகையான சாம்னாவில்  வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

மகராஷ்டிர மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தல் சுய மரியாதைக்கான யுத்தமாகும். இந்த மாநிலத்தை கைப்பற்ற நினைத்த பலர் மண்ணில் புதையுண்டனர். மகராஷ்டிரத்தை கைப்பற்ற பேராவலுடன் இங்கு வந்த ஔரங்கசீப் இந்த மண்ணிலேயே புதையுண்டார். இந்த மாநிலத்தை ஆண்ட மன்னர் சிவாஜிக்கு பிறகு பால்தாக்கரே வரலாறு வடைத்தார். வெளிநாட்டு படைகளை இந்தியாவில் இருந்து திரும்ப பெற வலியுறுத்தி இந்து ஸ்வராஜ்யத்தை சிவாஜி உருவாக்கினார். பின்னர் மறைந்த பால்தாக்கரே இந்துத்துவ கொடியை நாட்டில் பறக்க விடுவதற்கான மன உறுதியை கொண்டிருந்தார். நாட்டிலும் மகராஷ்டிரத்திலும் இந்துத்துவ கொள்கைகளை  பரப்புவதற்காக பல்வேறு எதிர்ப்புகளை பால்தாக்கரே சந்தித்துள்ளார். இந்த மாநிலத்தில் புதையுண்ட ஔரங்கசீப்பை போல் பல்வேறு புதிய ஔரங்கசீப்புகளை தாக்கரே தோற்கடித்துள்ளார். தேசிய நலனை பாதுகாப்பதில் மகராஷ்டிரத்துக்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இந்த மாநிலம் இந்துத்துவ கொள்கைகளை எப்போதும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவதில்லை என்று சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனா கட்சிகளிடையே கடந்த 25  ஆண்டுகளாக நீடித்து வந்த கூட்டணி தொகுதி பங்கீட்டு பிரச்சினை காரணமாக சமீபத்தில் முறிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்