முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சல பிரதேச முதல்வர் பதவிக்கு ஆபத்து

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

சிம்லா, செப் 29:

இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரசிங், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்று காமன்காஸ் என்ற தொண்டு நிறுவனம் பொதுநல வழக்கு தொடுத்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. வீரபத்ரசிங் முதல்வராக உள்ளார். 2008-09,2009-19,2010-11 ஆகிய ஆண்டுகளில் வருமானம் ரூ. 6.56 கோடி என்று வீரபத்ரசிங் கணக்கு காட்டியுள்ளார். இதற்கு முன் ஆண்டு வருமானம் ரூ. 47.35 லட்சம் என்று மட்டுமே அவர் கணக்கு காட்டியுள்ளார். காமன்காஸ் என்ற தொண்டு நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக இம்மாதம் 1ம் தேதியன்று சிபிஐ ஐகோர்ட்டில் நிலவர அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஊழல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, பண வெறுப்பு மற்றும் பல பொருளாதார முறைகேடுகள் சார்ந்த குற்றச்சாட்டுகள் வீரபத்ரசிங் மீது சுமத்தப்பட்டுள்ளன. அவர் 2008-10 காலகட்டத்தில் மத்திய உருக்கு மந்திரியாக இருந்த போது பன்னாட்டு நிறுவனம் ஒன்று அவருக்கு ரூ. 2.28 கோடி லஞ்சம் அளித்துள்ளது என்பதும் ஒரு முக்கிய குற்றச்சாட்டு ஆகும். ஏற்கனவே இமாச்சல பிரதேச ஐகோர்ட்டில் அவருக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

அவரது குடும்பத்தினர் மீதான வழக்கும் இதே போல் நிலுவையில் உள்ளது. வருமான வரித்துறை ஆணையர் இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரசிங்கின் விவசாய வருமானம் திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுவதை நம்ப முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். வீரபத்ரசிங் மீது போடப்பட்டுள்ள வழக்கு வலுத்து வருவதால் அவரது பதவிக்கு ஆபத்து நெருங்கி விட்டது என்று சிம்லா அரசியல் வட்டார தகவல் தெரிவிக்கிறது. உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்கள் முலாயம்சிங், மாயாவதி, மராட்டிய முன்னாள் முதல்வர் அசோக் சவான் ஆகியோரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த மூவரும் தற்போது எம்பிக்களாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் இம்மூவரும் எம்.பி. பதவியை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்