முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 கி.மீ. நடைப்போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியான், செப்.29 - இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு நேற்று மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
20 கிலோ மீட்டர் நடைப் போட்டி மகளிர் பிரிவில் இந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த குஷ்பிர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 5-வது வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 20 கிலோ மீட்டர் நடைப்போட்டியில் பந்தய தூரத்தை குஷ்பிர் கவுர் ஒரு மணி 33 நிமிடம் 7 விநாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முதலிடம் பிடித்த சீனாவின் லு சியூஷி 1:31:06 மணி நேரங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். ஆகவே,2 நிமிட இடைவெளியில் தங்கம் கைவிட்டுப் போனது.
தேசிய அளவில் தான் படைத்திருந்த சாதனையை விட 30 விநாடிகள் குறைவான நேரத்தில் அவர் இலக்கை கடந்தார். முன்னதாக 2012-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜூனியர் பிரிவினருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் நடைப் பிரிவில் குஷ்பிர் கவுர் வெண்கலம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்