முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் அதிமுகவினர் மாபெரும் உண்ணாவிரதம்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.30 - அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியைகண்டித்து மதுரையில் மதுரையில் அதிமுகவினர் மாபெரும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மதுரை மேலமாசிவீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் நேற்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, ஆர்.கோபாலகிருஷ்ணன் எம்.பி ஆகியோர் துவக்கி வைத்தனர். உண்ணாவிரதத்தில் மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பெ.இந்திராணி தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தலைவர்கள் உண்ணாவிரதத்தை வாழ்த்தி பேசிக்கொண்டிருந்த போது, அனைத்து பெண்களும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு தங்களது அறவழி போராட்டத்தில் பங்கேற்றனர்.

உண்ணாவிரதத்தில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசியதாவது, 10 கோடி தமிழ்மக்களின் நெஞ்சங்களிலே நீக்கமற நிறைந்து வாழ்ந்து வருபவர் ஜெயலலிதா. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியால் கடந்த 2 நாட்களாக தமிழ்சமுதாயமே உண்ணவோ, உறங்கவோ முடியாமல் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்து வருகிறார்கள். ஜெயலலிதாவை சிறைசாலைக்கு அனுப்பியதை அனைத்து சட்ட வல்லுனர்களும் எதிர்த்து வருகிறார்கள். இது போன்று தொடுக்கப்பட்ட எத்தனையோ பொய் வழக்குகளை தகர்த்து எறிந்ததை போல் இதையும் ஜெயலலிதா தகர்த்து எறிவார் என்றார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் பேசியதாவது, மதுரை மண்ணில் பாண்டிய மன்னனிடம் கண்ணகி நீதி கேட்ட இந்த பூமியில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டஅநீதியை கண்டித்து உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துகிறோம். அவருக்கு அநீதியை இழைத்து இருப்பது மாபெரும் குற்றமாகும். 5 ரூபாய் கூட வாடகை கொடுக்க முடியாமல் ஓடிஒளிந்த கருணாநிதி இன்றைக்கு உலகிலேயே 5 வது பணக்காரராக உள்ளார். தான் செய்த ஊழலில் இருந்து தப்பிக்க நீதியை விலைபேசியவர்தான் கருணாநிதி. அவர் பரம்பரையே தேர்தலில் நிற்ககூடாத அளவிற்கு பல்வேறு குற்றங்களை செய்துள்ளார். ஆனால் தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து ஒரு தியாக தீபமாக மக்களை காக்கும் சாமியாக பல்வேறு நீதிகளை பெற்றுத்தந்த ஜெயலலிதா தடைகளை தகர்த்து எறிந்து மீண்டும் தமிழக முதல்வராக வருவார் என்றார்.

கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு எம்எல்ஏ பேசியதாவது, உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழ் சமுதாயத்தின் நீதி வடிவாய் திகழ்ந்து வரும் ஜெயலலிதாவை அரசியல் சூழ்ச்சியால் மாபெரும் சதிவலையால் அநீதியை வழங்கிய சதிகார கும்பலுக்கு எதிராக இன்றைக்கு தமிழக மக்கள் கொதித்தெழுந்து அறவழியில் தங்களை போராட்டத்தில் அர்ப்பணித்துள்ளனர். எதிரிகளை தோற்கடித்து பல்வேறு வெற்றிகளை கண்ட ஜெயலலிதாவை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அநீதி இழைத்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை தமிழக மக்களின் பிரார்த்தனைகள் அறவழி போராட்டங்கள் போன்ற அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற்று இனி தமிழ்நாடு அம்மா நாடுதான் என்பதை மக்கள் நிரூபித்து காட்டுவார்கள். அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வருவார் என்றார்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் எம்எல்ஏ பேசியதாவது, மனித நேயம் இல்லாமல் மக்கள் சக்திக்கு விரோதமாக மாபெரும் அநீதி ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நோக்கமாகும். சிறந்த மக்கள் ஆட்சியை நடத்தி வரும் ஜெயலலிதாவின் அபரிதமான மக்கள் செல்வாக்கை கண்டு பொறுக்க முடியாத சில அரசியல் கட்சிகளும், மத வாத சக்திகளும் கூடி நிகழ்த்தப்பட்ட இந்த சதியை விரைவில் ஜெயலலிதா உடைத்து மீண்டும் வருவார். அதற்காக தமிழ்சமுதாய மக்கள் அனைவரும் அறவழி போராட்டத்தில் தங்களைஇணைத்து கொள்ள வேண்டும். நீதியின் வடிவமாய் வாழும் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டு பெண்குலமே கண்ணீர் வடித்து கதறி வருகிறது. இது போன்ற அறப்போராட்டங்களினால் தடைகளை தகர்த்தெறிந்து மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா வருவார் என்றார்.

மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது, இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 நாடுகளில் வாழும் தமிழ் சமுதாயம் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. 1972ல் இந்த இயக்கத்தை தோற்றுவித்த எம்ஜிஆர் காணாத பல்வேறு வெற்றிகளை கண்டு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஜெயலலிதா திகழ்கிறார். மகா பாரதத்தில் உச்சக்கட்ட போரின் போது கிருஷ்ணபரமாத்மா விஷ்வரூபம் எடுத்து அர்ச்சுணனுக்கு காண்பித்தார். அதைப்போல அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தனது விஸ்வரூபத்தை ஜெயலலிதா விரைவில் காட்டுவார்.ராமன் இருக்கும் இடம் அயோத்தியை போல ஜெயலலிதா இருக்கும் இடம்தான் எங்களுக்கு சொர்க்கமாகும். கருணாநிதியின் குடும்பத்தினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு பணத்தை கோடிக்கணக்கில் சம்பாதித்தனர். அதுபற்றி சுப்பிரமணியசாமி வழக்கு போட்டாரா? கருணாநிதியின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு சட்டவிரோத செயல்களுக்காக சுப்பிரமணியசாமி வழக்குப்போட்டாரா? இதே சுப்பிரமணியசாமி டெல்லியில் இருந்து பலவேறு உலக நாடுகளுக்கு பறந்து, பறந்து செல்கிறாரே அதற்கு உண்டான கணக்கை அவர் காண்பித்தாரா? மதுரையில் குடியிருக்கும் சுப்பிரமணியசாமியின் வீடு கட்டப்பஞ்சாயத்திதின் மூலம் அடித்து வாங்கப்பட்ட வீடாகும். 1998ம் ஆண்டு இதே மதுரையில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினாரே அவர் ஜெயலலிதாவின் தயவில் தானே எம்பியாக முடிந்தது. சுப்பிரமணியசாமி உயிருக்கு ஆபத்து வந்த போது காப்பாற்றப்பட்ட இடம் மதுரை என்பதை அவர் மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா சென்ற வாகனத்தின் மீது மோதி அவரது உயிரை குறிவைத்து ஏற்படுத்திய விபத்தை சம்பந்தப்பட்ட டிரைவர் மீது கருணாநிதி தன் ஆட்சியின் போது எந்த வழக்கும் போடவில்லை. தற்போது ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி நிரந்தரமானதல்ல. அவர் சுயம்புவாக தானாக எழுந்து வருவார். பெங்களூர் சிறையில் அவர் இருந்தாலும் தமிழக மக்களை நித்தம் நித்தம் நினைத்து வருகிறார். தமிழக மக்களுக்காக நல்லாட்சி நடத்தி வந்த அவரது பொற்கால ஆட்சி மீண்டும் தொடரும். ஆழிபேரலை தமிழகத்திற்கு வந்த போது தமிழகத்தின் பல்வேறுப குதகள் பாதிக்கப்பட்டன. ஆனால் திருச்செந்தூரில் மட்டும் கடல் உள் வாங்கியது. ஏனென்றால் அங்கு முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். அதனால் அங்கு வரும் பக்தர்களுக்கு பன்னீர் இலைகளால் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதுதான் திருச்செந்தூரை காப்பாற்றியது. அதைப்போல நமக்கு இரட்டை இலை இருக்கிறது எனவே எந்த அலை வந்தாலும் இரட்டை இலை இருக்கும் போது நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது.

தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலில் அதிமுகவை ஒதுக்கிவிட்டு எவரும் ஆட்சி நடத்த முடியாது. இன்று இழைக்கப்பட்டுள்ள அநீதி நிரந்தரமானதல்ல. அதிமுகவை ஜெயலலிதா இருக்கும் வரை எந்த கொம்பனாலும் அசைத்து விடமுடியாது. இன்றைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் நிரந்தமானவை அல்ல. இந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து மீண்டும் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா வருவார். அதுவரை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கழக தொண்டர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் அறவழிபோராட்டங்களில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி,தலைமை கழக பேச்சாளர்கள் அமுதா, நெத்தியடி நாகையன், சமத்துவ மக்கள் கட்சி மாநில பொருளாளர் சுநதரேசன் ஆகியோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் முன்னாள்எம்பி எஸ்.முத்துமணி, மாநில எம்ஜிஆர் மன்ற துணைசெயலாளர் எம்.எஸ்.பாண்டியன், துணை மேயர் கு.திரவியம், மாவட்ட நிர்வாகிகள் சி.தங்கம், ஜெ.ராஜா, பகுதி கழக செயலாளர்கள் பெ.சாலைமுத்து, தளபதி ஆர்.மாரியப்பன், எம்.ஜெயபால், எம்.என்.முருகன், பி.எஸ்.கண்ணன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, பூமிபாலகன், ஏ.கே.முத்திருளாண்டி, அணி செயலாளர்கள் எஸ்.டி.ஜெயபாலன், கா.டேவிட் அண்ணாதுரை, ஷ.ராஜலிங்கம், பெ.இந்திராணி, தமிழ்செல்வன், ஏ.ராஜீவ்காந்தி, டி.விநோத்குமார், புதூர் சுந்தரா, தொகுதி கழக செயலாளர்கள் கிரம்மர் சுரேஷ், எஸ்.முருகேசன், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆர்.ராமச்சந்திரன்,கோவிந்தன், ஏ.பி.பாலசுப்பிரமணியன், எம்.ரமேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் அமாவாசை, கவுன்சிலர்கள் புதூர் அபுதாகீர்,கேசவபாண்டியம்மாள், கார்னர் பாஸ்கரன் மற்றும் ஜி.என்.அன்புசெழியன், வி.வி.ஆர் ராஜ்சத்தியன், கணேசன், யுகா ராஜா, வல்லரசு, லட்சுமி, தத்தனேரி பன்னீர்செல்வம், மூமுக நிர்வாகிகள் ஆறுமுக நாட்டார், சண்முகசுந்தரம், சுந்தரசெல்வி ஒச்சாத்தேவர், சிவக்குமார், திருப்புவனம் பாண்டி, பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் சி.முத்துராமலிங்கம், எம்.டி.ராஜூ, கணேசன், மோகன், அழகுமலை, செல்வகுமார், மூவேந்தர் முன்னணி கழக மாவட்ட செயலாளர் பகவதி, மேற்குபகுதி இளைஞர் அணி பொருளாளர் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு பாசுபாய், எஸ்.சிக்கந்தர்பாட்சா, வட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், பாக செயலாளர் பாஸ்கரன், சூப்பர் மார்க்கெட் முத்துச்சாமி, வட்ட செயலாளர்கள் புதூர் கே.எம்.கண்ணன், பஜார் துரைப்பாண்டி,சக்திவினாயகர் பாண்டியன், கே.வி.கே.கண்ணன், எஸ்.போஸ், கந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்