முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் சென்னையில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.30 :அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வி.பி.கலைராஜன் எம்எல்ஏ தலைமையில் ஆயிரக்கணக்கானோர் எம்ஜிஆர் சமாதி முன்பு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்..

ஜெயலலிதா மீதான வழக்கில் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை கண்டித்து கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தி வருகின்றனர்.

தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் எம்எல்ஏ தலைமையில் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதத்தில் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .

இந்த உண்ணாவிரதத்தில் வி.பி.கலைராஜன் பேசியதாவது:-மக்கள் சக்தி கொண்ட முதல்வருக்கு எதிரான இந்த வழக்கு சுப்பிரமணியசாமி, கருணாநிதி மற்றும் கன்னட வெறியர்களால் பொய்யாக ஜோடிக்கப்பட்டது. ஏற்கனவே நம்முடைய முதலமைச்சர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ள கர்நாடகம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று நம் முதல்வர் வெற்றி பெறுவார் என்பது உறுதி.அவரை அரசியல் ரீதியாக வெல்ல முடியாதவர்கள் இப்படி ஒரு பொய் வழக்கை போட்டு வென்றுவிடலாம் என நினைக்கிறார்கள். அவர்களது திட்டம் ஈடேறாது. அனைத்தையும் தவிடுபொடியாக்கி முதலமைச்சர் நிரபராதி என நிரூபிப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த உண்ணாவிரதத்தில், தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், சாந்தி ராஜமாணிக்கம், முன்னாள் எம்.பி. சரோஜா, வாரியத்தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஏ. அர்ஜுனன், இளைஞரணி மாவட்ட செயலாளர் அப்பு தீபக், ஓட்டுநரணி மாவட்ட செயலாளர், தி.நகர் சந்திரசேகர், தி.நகர் பகுதி செயலாளர் ஏழுமலை, ஆயிரம்விளக்கு பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்சி, அண்ணாநகர் பகுதி செயலாளர் ஏ.இ. வெங்கடேசன் எம்சி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் வி.கே. பாபு, மண்டலக்குழு தலைவர்கள் எல்ஐசி மாணிக்கம், எஸ். சக்தி, கவுன்சிலர்கள் யு. கற்பகம், பி. ஆறுமுகம் (எ) சின்னையன், ஆர்.சி.ஆறுமுகம், தி.நகர் சத்யா, பத்மினி சுந்தரம், புஷ்பாநகர் ஆறுமுகம், சாந்தி பாஸ்கர், டி.சிவராஜ், சுகுமார் பாபு, முகமதுஅலி ஜின்னா, அமீர்பாஷா, ஜீவா தீனன், நிர்வாகிகள் வழக்கறிஞர் சதாசிவம், முருகன், மெர்குரி மணி, சுலைமான், கிருஷ்ணமூர்த்தி, வி.எம்.ராஜன், குமரேசன், பரத், இளையமாறன், எல்.சங்கர், வழக்கறிஞர் ஸ்ரீவித்யா, மயிலை ராஜேஷ்கண்ணா, தி.நகர் கே.ஆறுமுகம், நாச்சியப்பன்

உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்