முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழுகையும்.. கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்!

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.30: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக நேற்று கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர்களாக பதவியேற்கும் போது மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இம்முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறைக்கு சென்றதை அடுத்து கண்ணீரும் கதறலுமாய் பதவியேற்பு நிகழ்ந்தது.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்த்தைதொடர்ந்து,

வைத்தியலிங்கம். பதவி பிரமாணம் வாசித்தபோது விசும்பல் சத்தம்தான் அதிகம் கேட்டது.

நத்தம் விஸ்வநாதன், மோகன், வளர்மதி,எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி, சம்பத், செல்லூராஜ், காமராஜ், தங்கமணி உள்ளிட்ட பல மீண்டும் அமைச்சர்களாக கண்ணீர் மல்க கதறி அழுதபடி பதவியேற்றனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி. அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்தபோது அவரது குரல் உடைந்து கம்மியது. கண்ணீர் வழிந்தோடியது. ஒருவழியாக பதவிப்பிரமாணத்தை வாசித்து முடித்தார்.பா.வளர்மதி நேற்று

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது கண்ணீர் மல்க பதவியேற்ற அவர், பதவிபிரமாணத்தை முடிக்கும் முன்பாகவே கதறி அழுதுவிட்டார்.

இதேபோல மற்ற அமைக்சர்களும் க்ண்ணீர் மல்க பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்,இதுவரை தமிழக அமைச்சர் கள்பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக க்ண்ணீருடன் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இதற்கு முன் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகபதவியேற்ற போது கூட அமைச்சர்கள்யாரும் அழுததில்லை என்பது குறிபிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago