முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களின் வேகம் - புதுமை சிறந்தது: மோடி பேச்சு

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

நியூயார்க், செப்.30 - அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை திருவிழாவில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

சர்வதேச வறுமை ஒழிப்பு திட்டம் என்ற இயக்கத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹக் இவன்ஸ் என்ற சமூக சேவகர் வழிநடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரமாண்ட இசை விழா நடத்தப்பட்டு நிதி திரட்டப்படுகிறது.

இந்த ஆண்டு ‘குளோபல் சிட்டிசன்' திருவிழா நியூயார்க் நகரில் நடை பெற்றது. இதில் பிரபல மேற்கத்திய பாடகர்கள் ஜே-இசட், பியான்ஸ் உள்ளிட்டோரின் இசைக் கச்சேரி நடைபெற்றது. ஹாலிவுட் நடிகர் ‘எக்ஸ்மேன்’ புகழ் ஹக் ஜாக்மேன், நடிகை ஜெசிகா ஆல்பா, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

இந்த பிரம்மாண்ட திறந்தவெளி இசைத் திருவிழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று அங்கு கூடியிருந்த 60,000-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் மத்தியில் உரையாற்றினார். பிரதமர் மோடியை நடிகர் ஹக் ஜாக்மேன் மேடையில் அறிமுகப் படுத்தினார். அப்போது இளைஞர் கூட்டத்தினர் உரக்க கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர்.

பொதுவாக குறிப்புகள் இன்றி மேடையில் முழங்குவது மோடியின் சிறப்பம்சம். அதே பாணியில் சிறு குறிப்புகூட இன்றி ஆங்கிலத்தில் மோடி சரளமாகப் பேசினார். அவர் பேசியதாவது:

முதியோரின் ஆலோசனை யால் உலகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று சிலர் நம்பு கின்றனர். என்னைப் பொறுத்த வரை, இளைஞர்களின் வேகம், புதுமை, எதையும் நேர்த்தியாக செய்யும் திறன் ஆகியவை தான் சிறந்தது, வலிமையா னது. இது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்தியாவை கட்டியெழுப்ப 80 கோடி இளைஞர்கள் கைகோர்த்து செயல்படுகின்றனர். வறுமையில் இருந்து ஏழைகளை விடுவிக்க வேண்டும், அவர்களுக்கு சுத்த மான குடிநீர், சுகாதாரமான வாழ்வு, உயர்தர மருத்துவம், அனைவருக்கும் வீடு ஆகிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

உலகம் வளம்பெற விரும்பும் உங்களுக்கு வணக்கம் செலுத்து கிறேன். எல்லோரும் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும், நோய் நொடியின்றி வாழ வேண்டும். ஆன்மிகம் வளர வேண்டும். எந்தவொரு உயிரும் துன்புறக்கூடாது. உலகமெங்கும் அமைதி நிலவ வேண்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக. இவ்வாறு மோடி பேசினார்.

விழாவில் பங்கேற்ற இளைஞர் கள் கூறியபோது, இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்திருப் பதை வரவேற்கிறோம், இந்த மேடையில் அமைதியை வலியுறுத் திய அவரது பேச்சு உணர்வுபூர்வ மாக இருந்தது என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்