முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்ல அரிக்கும் கரையான் பாஜக: ராஜ் தாக்கரே தாக்கு

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப்.30 - பாஜக மெல்ல அரிக்கும் கரையான் என்று மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். உடல் நலம் சரியில்லாமல் இருந்த அவர் கலந்து கொண்ட முதல் பேரணி இது தான்.

அப்போது அவர் பேசுகையில்,

சிவசேனாவுடனான கூட்டணியை பாஜக திட்டமிட்டு தான் உடைத்தது. நான் மட்டும் சிவசேனா இடத்தில் இருந்திருந்தேன் என்றால் என்றைக்கோ அவர்களை விரட்டிவிட்டிருப்பேன். பாஜக மெதுவாக அரிக்கும் கரையான் போன்றது.

பால் தாக்கரே மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பாஜகவை கழற்றிவிட்டிருப்பார். இத்தனை அவமானத்திற்கு பிறகும் சிவசேனா மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்து வருகிறது. மும்பை முனிசிபால் கார்பரேஷன் மூலம் நல்ல வருமானம் வரும் என்பதால் அதில் மட்டும் பாஜக-சிவசேனா கூட்டணி தொடர்கிறது.

ஆட்சி அதிகாரத்தை எங்களிடம் அளித்துப் பாருங்கள், சுயமரியாதை என்றால் என்ன என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன். ஆண்கள் தாங்கும் வாங்கும் வீட்டை மனைவியின் பெயரில் பதிவு செய்தால் நாங்கள் அந்த வீட்டுக்கு வரி விலக்கு அளிப்போம். ஆனால் அதை கூறி நான் வாக்கு சேகரிக்க விரும்பவில்லை.

மகாராஷ்டிராவிலும் நல்ல சாலைகளை அமைக்கலாம். அது ஒன்றும் ராக்கெட் அறிவியல் கிடையாது. அண்டை மாநிலங்களில் நல்ல சாலைகள் உள்ளபோது இங்கு மட்டும் ஏன் இல்லை. அதற்கு நெக்சஸ் தான் காரணம். சாலை போடும் பணியை ஒரே கான்டிராக்டரிடம் மீண்டும் மீண்டும் அளித்தால் இப்படி தான் நடக்கும்.

பணம் சம்பாதிப்பது எனக்கு முக்கியம் அல்ல. நான் மாநிலத்திற்காக பாடுபட விரும்புகிறேன். மாதிரி எல்லாம் தயாரித்துவிட்டேன். அதனால் ஆட்சிக்கு வந்தால் எப்படி மாநிலத்தை நடத்துவது என்று யோசிக்கத் தேவையில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்