முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதிகள் - உணவக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக் 1:

தமிழகத்தில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரென்ட், டீக்கடைகள் போன்ற அனைத்து உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக மதுரை தொழிலாளர் நல உதவி ஆணையர் பெ. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்த உத்தரவு 13.8.2014ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி தலைமை செயலர், கண்காணிப்பாளர், காசாளர், அக்கவுண்டன்ட், கிளார்க், டைபிஸ்ட் போன்ற கிரேடு 1 ஊழியர்களுக்கு ரூ. 1834 சம்பளம் உயர்த்தி முந்தைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியுடன் சேர்த்து ரூ. 7,109 லிருந்து தற்போது ரூ. 8,943 ஆக சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். துணை சமையலர், பேக்கர், போர்மேன் போன்ற கிரேடு 2 ஊழியர்களுக்கு ரூ. 1,823 சம்பளம் உயர்த்தி முந்தைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியுடன் சேர்த்து ரூ. 7,063லிருந்து தற்போது ரூ. 8,886 ஆக சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தோசை, இட்லி, டீ, காபி, பரோட்டா தயாரிப்பாளர், தலைமை சப்ளையர், வாட்ச்மேன் போன்ற கிரேடு 3 ஊழியர்களுக்கு ரூ. 1,810 சம்பளம் உயர்த்தி முந்தைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியுடன் சேர்த்து ரூ. 8,820 ஆக சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். சப்ளையர், காய்கறி வெட்டுபவர், சமையல் உதவியாளர் போன்ற கிரேடு 4 ஊழியர்களுக்கு ரூ. 1,799 ஊதியம் உயர்த்தி முந்தைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியுடன் சேர்த்து ரூ. 8,764 வழங்க வேண்டும். ரூம்பாய், ஆபீஸ் பாய், லிப்ட் ஆபரேட்டர், தோட்ட வேலையாள் போன்ற கிரேடு 5 ஊழியர்களுக்கு ரூ. 1,790 சம்பளம் உயர்த்தி முந்தைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியுடன் ரூ. 8,716 ஆக சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து உணவு நிறுவனங்களிலும் மேற்கண்ட சம்பள உயர்வு அமல்படுத்த வேண்டும். சம்பள உயர்வு வழங்காத நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்