முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி: குற்றப்பத்திரிகை மீதான உத்தரவு 20-க்கு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக் 1:

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கின் குற்றப்பத்திரிகை மீதான உத்தரவை வரும் 20ம் தேதிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ளது. இந்த வழக்கில் மத்திய அமலாக்கத்துறை தாக்கல்  செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான வாதங்களை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் கடந்த சில நாட்களாக முன்வைத்து வந்தனர். இதன் தொடர்ச்சியான விசாரணை சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயாளு அம்மாள், அமிர்தம் ஆகியோரது தரப்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார். அப்போது இருவர் தரப்பு வாதங்களை அவர் எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கில் மத்திய அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை முன்வைக்க அதன் சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் அனுமதி கேட்டார். அதற்கு அனுமதியளித்த சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி பிறப்பித்த உத்தரவில்,

குற்றப்பத்திரிகை மீதான குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்கள் இத்துடன் நிறைவடைந்துள்ளது. தயாளு அம்மாள், அமிர்தம் ஆகியோர் முன் வைத்த வாதங்களுக்கு அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய அனுமதி அளிக்கிறேன். இதை தொடர்ந்து இந்த வழக்கின் குற்றப்பத்திரையில் சுமத்தப்பட்ட அனைவரது குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்வது தொடர்பான உத்தரவு அக்டோபர் 20ம் தேதி பிறப்பிக்கப்படும் என்றார்.

2 ஜி அலைக்கற்றை ஓதுக்கீடு பெற்றதற்கு பிரதிபலனாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் திமுக ஆதரவு கலைஞர் டி.விக்கு அளித்த ரூ. 200 கோடி அளவிலான நிதியை சட்டவிரோத பண பரிவர்த்தனை என்று சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்க துறை கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் மத்திய தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர் சாகித் உஸ்மான் பல்வா, டி.பி. ரியாலிட்டி நிறுவனர் வினோத் கோயங்கா உள்ளிட்டோர் மற்றும் 9 நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்