முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் படைகளை வாபஸ் பெற அவசரம் காட்ட கூடாது

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக் 1:
ஈராக்கில் செய்தது போல ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதில் அமெரிக்கா அவசரம் காட்ட கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடி எச்சரித்தார். இது தொடர்பாக அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகளுக்கான குழுவில் அவர் பேசியதாவது,
ஈராக்கில் இருந்து படைகளை அவசரமாக வாபஸ் பெற்று தவறு செய்தது போல ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தவறு செய்து விட கூடாது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் ஏற்பட்டு  விட கூடாது. ஆகையால் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அமெரிக்கா மெதுவாகவே வாபஸ் பெற வேண்டும். தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம் என்றும், கெட்ட தீவிரவாதம் என்றும் எதுவும் கிடையாது. தீவிரவாதத்துக்கு எல்லையோ அல்லது நாடோ கிடையாது. தீவிரவாதம் மனித குலத்துக்கு எதிரானதாகும். அதற்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டனர். அந்த அரசியல் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. இதற்கு இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றமே காரணமாகும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளும் திறன் உண்டு. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவைப்படாது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்