முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய போட்டி: குத்துச் சண்டையில் மேரிகோம்-க்கு தங்கம்

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியான், அக்.02 - இன்சியானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் குத்துச்சண்டை இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. 51 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை ஷெகரேபேகோவாவை சந்தித்தார் மேரி கோம். இதில் சிறப்பாக செயல்பட்ட மேரிகோம் 2-0 என வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். கடந்த முறை (2010, குவாங்சு) இப்போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்.

ஆண்கள் ‘கிரோக்கோ-ரோமன்' பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தர்மேந்திர் 0-4 என ஈரானின் தார்சி பஷிரியிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் துளசி சந்தீப் 0-4 என தஜிகிஸ்தானின் ஓப்லோபெர்டிவிடம் வீழ்ந்தார்.

காலிறுதியில் இந்தியாவின் குர்பிரீத் சிங் 1-3 என ஈரானின் போயெரி பயானியிடம் தோல்வியை தழுவினார். காலிறுதியில் இந்திய வீரர் மனோஜ் குமார் 0-3 என சீனாவின் பெங்கிடம் வீழ்ந்தார். 7 தங்கம், 8 வெள்ளி, 32 வெண்கல பதக்கங்களுடன் தரவரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்