முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, அக்.02 - திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ 6ம் நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்தார். மாலையில் தங்க ரத உற்சவம் நடந்தது.

திருப்பதி ஏழிமலையான் கோயில் பிரமோற்சவம் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலை மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5ம் நாளான்று பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் கருடசேவை உற்சவம் நடந்தது.

6வது நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதிகளில் பவனி வந்தார். யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வந்தார். சுவாமியின் தசவதாரங்களை குறிக்கும் வேடங்களை அணிந்து பக்தர்கள் வீதி உலாவில் கலந்து கொண்டனர். இன்று காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திரபிரபை வாகன உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான மகாதேரோட்டம் நாளை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்