Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

மதுரை, அக்.02 - அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து மதுரையில் கலைஅறிவியல் மற்றும் மருத்துவகல்லூரி மாணவர்கள் நேற்று மாபெரும் ஊர்வலம் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதியை கண்டித்து மாணவர்கள் நேற்று மதுரையில் மாபெரும் ஊர்வலத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலிலே நின்று கொண்டு அம்மாவிற்கு வழங்கப்பட்ட அநீதியை கண்டித்து கோஷம் போட்டுக் கொண்டு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு ஊர்வலமாக நடந்து சென்று தேவர் சிலை முன்பாக அமர்ந்து கொண்டு ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அதே போல் தல்லாகுளம் அவுட்போஸ்ட் அருகே காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலமாக சென்று பெரியார் சிலை முன்பாக அமர்ந்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். மதுரை தெப்பகுளத்திலுள்ள தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் பல்வேறு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் சாமி மற்றும் மனோஜ் ஆகியோர் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கெல்லாம் பல்வேறு திட்டங்களை வாரி வழங்கி எங்களை போன்ற மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது எட்டாக்கனியாக இருந்தது. அதை எங்கள் கையில் தவழச் செய்து எங்களுக்கு மாபெரும் அறிவை வழங்கியவர் அம்மா அவர்கள். மேலும் தமிழகத்தின் பிரச்சனைகளான முல்லை பெரியாறு, காவேரி போன்ற ஜீவதார பிரச்சனைகளை தீர்த்து தமிழகத்திற்கு வளத்தை சேர்த்த அம்மா அவர்களுக்கு வஞ்சக சூழ்ச்சி கொண்ட சிலபேர் மாபெரும் அநீதியை செய்துள்ளனர். இதற்கு உடனடியாக பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இந்தியாவில் உள்ள மாணவர்கள் அனைவரும் அறப்போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.

மதுரை பனகல்சாலையிலுள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி முன்பு ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமான மருத்துகல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்