முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் 67 பேரை விடுதலை செய்தது இலங்கை

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

 

ராமேசுவரம்.அக்.2: எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் உள்பட தமிழக பகுதியை சேர்ந்த 67 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி தமிழக முதலவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தார்.அதனையொட்டி இலங்கை நீதிமன்றம் மீனவர்கள் நேற்று விடுதலை செய்து உத்தரவுயிட்டது.இதனையொட்டி விடுதலையான மீனவர்கள் ஒரு சில நாட்களில் அவர்கள் சொந்த பகுதிக்கு திரும்புவார்கள் என மீனவர்களின் குடும்பங்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

 

 

ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஆகிய தேதிகளில் மீன்பிடிக்க சென்ற 42 மீனவர்களையும் அதுபோலா செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி பூம்பூகார் பகுதியிலிருந்து மீன்பிடிக்க செனற 21 மீனவர்களையும் மற்றும் நாகபட்டினம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 67 மீனவர்களையும் இந்திய கடலோரப்பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.அதன் பின்னர் மீனவர்களை விசாரணை செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.அதன் பின்னர் போலீஸார் மீனவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து ராமேசுவரம் மீனவர் 6 பேரை மன்னார் நீதிமன்றத்திலும். 36 மீனவர்களை ஊர்க்காவல்துறை. நீதிமன்றத்திலும் அதுபோல பூம்புகார்.நாகபட்டினம் மீனவர்கள் 25 பேரை பரித்திதுறை நீதிமன்றத்திலும் பிரித்து ஆஜர் படுத்தினர்.மீனவர்களை விசாரணை செய்த நீதிபதிகள் அக்டோபர் 7 ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.அதன் பேரில் போலீஸார் ராமேசுவரம் மீனவர்கள் 36 பேரை அனுராதபுரம் சிறையிலும்,மற்ற மீனவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையிலிருந்த 67 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதலவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தார்.இதனையொட்டி இந்திய பிரதமர் மோடி மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இலங்கை அதிபர் ராஜபட்சே கேட்டுக்கொண்டார்.அதன் பேரில் ராஜபட்சே பரிந்துரைப்பபடி இலங்கை நீதிமன்றம் மீனவர்களை விடுதலை செய்து நேற்று உத்தரவு பிற்பிப்பித்தது.அதனையொட்டி சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 67 பேரையும் போலீஸார் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.அதன் பின்னர் மீனவர்களின் ஆவணங்களை சரிபார்க்கப்பட்டு இலங்கை அரசு இலங்கை கடற்படை அதிகாரிகள் மூலம் பாதுகாப்பாக ஒரு சில நாட்களில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.மேலும் மீனவர்கள் விடுதலையான தகவல் கிடைத்ததையொட்டி ராமேசுவரம் மீனவர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்