முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராபிக் ராமசாமிக்கு அபராதம்: சென்னை ஐகோர்ட் கண்டிப்பு

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக் 2:

விளம்பரம் தேடி கொள்ளும் நோக்கில் பொதுநல வழக்கு தொடர்ந்ததாக சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ராஜாராம் ஆகியோர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் ஜெயலலிதாவை தலைமையாக கொண்டுள்ள அவரது கட்சியினர் யாரும் ஆட்சியமைக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், ஆர். மகாதேவன் ஆகியோரடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

சமூகத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், வறுமையில் இருக்கும் மக்கள் பொருளாதார வசதி இல்லாமல் உதவி இல்லாமல் நீதிமன்றத்தை நாட முடியாதவர்களுக்காக அவர்களின் சார்பில் சமூக ஆர்வம் கொண்ட ஒருவர் வழக்கு தொடர்வதுதான் பொதுநல வழக்கு சமீப காலமாக பொதுநல வழக்குகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. மனுதாரர் தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் கண்மூடித்தனமாக குற்றச்சாட்டு கூறும் வகையில் வார்த்தைகள் ஆகியவற்றை மனுவி்ல் பயன்படுத்தி உள்ளார். விளம்பரம் தேடி கொள்ளும் வகையில் இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். இதே போன்று எதிர்காலத்தில் நடந்து கொள்ள கூடாது என்பதால் அதிக அபராத தொகையுடன் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்றத்தின் மதிப்பு மிக்க நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்