முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் தேவிலாலின் பேரனை முதல்வராக்க முயற்சி

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

அரியானா சட்டமன்ற தேர்தலில், இந்திய தேசிய லோக் தளம் சார்பில் தேவிலா லின் கொள்ளு பேரன் துஷ்யந்த் சிங்கை (26) முதல்வராக்க முயற்சிக்கப்படுகிறது.

பஞ்சாபில் இருந்து 1966-ல் பிரிந்த அரியானா, குடும்ப அரசியலுக்கு பெயர் போனதாக திகழ்கிறது. இம் மாநிலத்தை தேவிலால், பன்ஸிலால், பஜன்லால் என 3 லால்-கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்தனர். இதில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது பன்ஸிலால் குடும்பம். இரண்டாவதாக பஜன்லால், மூன்றாவதாக தேவிலால் குடும்பம் ஆட்சி செய்தது.

இதில் அரியானா முதல்வராகவும் நாட்டின் துணை பிரதமராகவும் பதவி வகித்த தேவிலாலின் கொள்ளு பேரன் துஷ்யந்த் சிங். தற்போது எம்.பி.யாக இருக்கும் இவர் அரியானா சட்டமன்ற தேர்தலில் உச்சானா கலன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேவிலாலின் மகனும் ஐ.என்.எல்.டி. தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா அரியானா முதல்வராக இருந்தபோது, 1999-ல் நடந்த ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் சிக்கினார். இவ்வழக்கில் தனது மகன் அஜய் சிங் சவுதாலாவுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்ததால், அவர்களால் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. இதையடுத்து அஜய் சிங்கின் மகன் துஷ்யந்த் சிங், ஹிஸார் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

இந்நிலையில் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது பேரன் துஷ்யந்தை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார். தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால் துஷ்யந்தை அவர் முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்