முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8ம் நாள் பிரம்மோற்சவம்: திருப்பதியில் தேரோட்டம்

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, அக் 4 - திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

7ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி வீதியுலா வந்தார். மாலை சந்திர பிரபையில் மலையப்ப சாமி வீதியுலா வந்தார். 8ம் நாள் பிரமோற்சவமான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. பூதேவி, ஸ்ரீதேவி சமேதரராக மலையப்பசாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வந்தார்.

மாட வீதியில் இருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தேரின் முன்பு கலைக்குழுவினர் நடனமாடி வந்தனர். திருமலையில் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 74,793 பக்தர்கள் மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இதில் தர்ம தரிசனம் செய்தவர்கள் மட்டும் 54,371 பேர் ஆவர்.

இவர்கள் தரிசனத்துக்காக 30 மணி நேரம் காத்து நின்றனர். நேற்று முன்தினம் ஒரு நாள் உண்டியல் வருமானம் மூலம் 2.49 கோடி வசூலானது. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 751 பேருக்கு மதிய அன்னதானம் வழங்கப்பட்டது. தரிசன வரிசையில் நிற்கும் பக்தர்கள் 20 ஆயிரம் பேருக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டதாகவும் 21, 600 பேருக்கு பால், 25 ஆயிரம் பேருக்கு டீ, காபி வழங்கப்பட்டதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்