முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 24-ல் திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி திருவிழா

புதன்கிழமை, 8 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable


குன்றம், அக் 9:
திருப்பரங்குன்றம் கோயிலில் வரும் 24ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.
முருகப் பெருமான் அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளிலும் 12 மாதமும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த ஒவ்வொரு திருவிழாவின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்த பிறகு அவரவர் வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். ஆனால் கந்தசஷ்டி திருவிழாவில் மட்டுமே பக்தர்கள் 6 நாட்கள் தொடர்ந்து கோவிலில் தங்கியிருந்து கடும் விரதம் கடைப்பிடிப்பது தனிசிறப்பு.
இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறுநாள் வரும். ஆனால் கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் தீபாவளி தினத்தன்று கந்தசஷ்டி திருவிழா  வந்தது. அதனால் பெரும்பாலான பக்தர்கள் தீபாவளி கொண்டாடமலே கோவிலுக்கு வந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு தீபாவளி முடிந்து ஒருநாள் இடைவெளி விட்டு வருகிறது. அதாவது இந்த ஆண்டு வருகிற 22ம் தேதி தீபாவளி வருகிறது. அப்படியென்றால் மறுநாள் 23ம் தேதி வழக்கம் போல கந்தசஷ்டி திருவிழா தொடங்கும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பது எதார்த்தம். ஆனால் ஒரு நாள் இடைவெளி விட்டு 24ம் தேதி தொடங்குகிறது. இது போன்று இடைவெளி எப்போதும் வராது. ஏதாவது ஒரு ஆண்டில் வரும். ஆனால் இந்த ஆண்டு வந்திருப்பது ஆபூர்வம் என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்