முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரகிரகணம்: திருப்பதி கோயில் நடை சாத்தப்பட்டது

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, அக்.10-

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 11 மணி நேரம் சாத்தப்பட்டது. இரவு 10.30 க்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள அனைத்து கோயில்களின் நடை நேற்றுமுன் தினம் காலை முதலே சாத்தப்பட்டது.

கிரகணத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. சந்திர கிரகணம் நேற்று மாலை 3.54 மணிக்கு தொடங்கி இரவு 7.05 மணி வரை நீடித்தது. இதற்கு 6 மணி நேரம்

முன்னதாகவே திருப்பதி தேவஸ்தான கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. பிறகு இரவு 8 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு 10.30 மணியில் இருந்து சர்வ தரிசன பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

ஆந்திர மாநிலத்தில் உள்ள வாயுதலமாக விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில், மூலவருக்கு கிரகண கால சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்