முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று வெஸ்ட் இண்டீசுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, அக் 11 - இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. கொச்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 321 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இந்தியா 197 ரன்னில் சுருண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பேட்டிங் மோசமாக இருந்தது. இன்று 2வது ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இதில் தோற்றால் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று விடும். இதனால் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இந்திய அணி பேட்டிங்கில் ஷிகார் தவான் மட்டும் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடினார். மற்ற வீரர்கள் சொதப்பி விட்டனர். குறிப்பாக விராட் கோலியின் ஆட்டம் கவலை அளிப்பதாக இருக்கிறது. அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். சுரேஷ் ரெய்னா, டோனி, அம்பதி ராயுடு ஆகியோரும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். கொச்சி போட்டியில் பந்து வீச்சு குறித்து கேப்டன் டோனி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இருந்த போதிலும் பவுலிங்கிலும், முன்னேற்றம் காண்பது அவசியமாகும். முதல் போட்டியில் வென்று உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும். அந்த அணியில் கேப்டன் வெய்ன் பிராவோ, சாமுவேல்ஸ், டாரன்பிராவோ, போல்லார்ட், டாரன்சமி ராம்தின் ஆகியோர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் ரோச், ராம்பால், ஹோல்டர், சுலைமான், பென் ஆகியோர் உள்ளனர். அந்த அணி சமநிலையில் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. அதிரடி பேட்ஸ்மேன்கள், சிறந்த பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள் என வலுவாக இருக்கிறது. இதனால் வெஸ்ட்
இண்டீஸ் அணியை வீழ்த்த இந்திய அணி கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago