முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுத்தமான கேரளா திட்டம்: சாண்டியுடன் மம்முட்டி பங்கேற்பு

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக் 12 - கேரளாவில் மது விலக்கை முழுமையாக அமல்படுத்த உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக மாநிலத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் மூடப்பட்டன. அரசு மதுக்கடைகளும் ஞாயிற்று கிழமைகளில் அடைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுத்தமான கேரளா, பாதுகாப்பான கேரளா என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. இதற்கான விளம்பர தூதராக பிரபல நடிகர் மம்முட்டி நியமிக்கப்பட்டார். இந்த திட்டத்தின் தொடக்க விழா திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டு தி்ட்டத்திற்கான சின்னத்தை பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன், கல்வி மந்திரி அப்துரப், உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் உம்மன் சாண்டி கேரளாவை மது இல்லாத மாநிலமாக மாற்றுவதே அரசின் குறிக்கோள். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். படிப்படியாக மதுபார்கள் மூடப்படும். இதில் ஏற்படும் இழப்பை அரசு ஏற்றுக் கொள்ளும் என்றார். உள்துறை மந்திரி சென்னிதலா கூறும் போது, மாநிலத்தில் கடந்த மே மாதம் வரை போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 4451வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 4329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். விழாவில் மேஜிக் நிகழ்ச்சிகளும் நடந்தன. அப்போது மேஜிக் நிபுணர் பிராந்தி ஊற்றப்பட்ட கண்ணாடி டம்பளரை முதல்வர் உம்மன்சாண்டியிடம் கொடுத்தார். அதை தனது மேஜிக்கால் சாதாரண தண்ணீராக மாற்றி காட்டினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் இதை கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago