முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, அக்.12 - புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கடந்த 4 ஆம்தேதி முடிவடைந்தது. எனினும் புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் நேற்று முதலே குவியத் தொடங்கினர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரம் ஆனது. கால்நடை பக்தர்கள், 20 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு கட்டண பக்தர்கள் 5 மணி நேரமும் தரிசனத்துக்காகக் காத்து நின்றனர்.

பாத யாத்திரை பக்தர்களின் வசதிக்காக , திவ்ய தரிசன டோக்கன் வழங்குவது இன்றும் நாளையும் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப் படுவதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

தர்ம தரிசனத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்