முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாங்காய் மாஸ்டர்: பெடரர் சாம்பியன்

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஷாங்காய், அக்.14 - ஷாங்காயில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஷாங்காய் மாஸ்டர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உலக தரவரிசையில் 3-வது இடத்திலுள்ள ரோஜர் பெடரர், தரவரிசையில் 29-வது இடத்திலுள்ள பிரான்ஸின் கில்ஸ் சைமனைச் சந்தித்தார். முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. அதனை 7-6 என்ன புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய பெடரர், இரண்டாவது செட்டையும் 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி, சைமனை நேர் செட்களில் வீழ்த்தி கோப்பை யை வென்றார்.

17 கிராண்ட்ஸ்லாம்களை வென்றுள்ள ரோஜர் பெடரர் நடப்பாண்டில் வெல்லும் நான்காவது கோப்பை இதுவாகும். மேலும், பெடரர் வெல்லும் 23-வது மாஸ்டர்ஸ் கோப்பை மற்றும் சீனாவில் வெல்லும் முதல் மாஸ்டர்ஸ் கோப்பையாகும். சைமன் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல்முறை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்