முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தமிழ் மைய விழா: நடிகர் விவேக் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

கனக்டிகட், அக் 15 - அமெரிக்காவின் கனக்டிகட் மாகாணத்தில் நடக்கும் அமெரிக்க தமிழ் மையத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

அமெரிக்க தமிழ் மையத்தின் முதலாம் ஆண்டு விழா கடந்த ஆண்டு சிறப்பாக நடந்தது. விழா முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்த்துடன் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் ஆண்டு விழா வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. கனக்டிகட் மாகாணத்தில் உள்ள நியூ ஹேவன் நகரில் நடக்கும் விழாவில் சின்னக் கலைவாணர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விவேக்கின் சிறப்புரையை தொடர்ந்து தமிழ் மற்றும் இந்திய கலை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பின்னர் விவேக் வழங்கும் நகைச்சுவை நிகழ்ச்சியும் இறுதியாக, நியூ ஜெர்சி அனிதாகிருஷ்ணா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அமெரிக்கத் தமிழ் மைய நிறுவனர் முனைவர் பழனி சுந்தரம் கவனித்து வருகிறார். விழாவுக்கான டிக்கெட்டுகளை sulekha.com என்ற இணையதளத்தில் வாங்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago