முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் சங்கத்தின் முடிவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.15

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் கூட்டத்தை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் சூதாட்டம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்திய கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த சீனிவாசன், அவரது மருமகன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக் குழு நவம்பரில் அறிக்கை அளிக்க உள்ளது.

இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட சீனிவாசன் சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகி விட்டார். மீண்டும் இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக முயற்சி எடுத்து வரு கிறார். அதற்கு வசதியாக கடந்த செப்டம்பர் 26-ம் தேதி சென்னை யில் நடந்த இந்திய கிரிக்கெட் சங்க கூட்டத்தில், ஆண்டுக் கூட் டத்தை நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து முடிவெடுக்கப் பட்டது.

இதை எதிர்த்து பிஹார் கிரிக் கெட் சங்கம் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்திய கிரிக்கெட் சங்க விதி களின்படி, ஆண்டுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்த வேண்டும். எனவே, இந்திய கிரிக்கெட் சங்கத்தின் முடிவுக்கு தடை விதித்து, கூட்டத்தை முன்கூட்டியே நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இம்மனு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், இப்ராகிம் கலிபுல்லா முன்பு விசாரணைக்கு வந்தது. ஆண்டு கூட்ட தேதியில் தலையிட மறுத்த நீதிபதிகள், "ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் நடந்த ஊழல் குறித்து மட்டும்தான் நீதிமன்றம் அக்கறை எடுத்துக் கொள்ளும். சீனிவாசன் தலைவ ராகி விடக் கூடாது என்பது உங்கள் எண்ணமாக உள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 10-ம் தேதி நடைபெறும். அப்போது கிரிக்கெட் சூதாட்டம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும். அதுவரை பொறுத்திருங் கள்" என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்