முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபா வழிபாடு: சர்ச்சை: விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.15 - சாய்பாபாவை வழிபடுவது குறித்த சர்ச்சையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பக்தர்கள் விரும்பினால் சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடரலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

துவாரகாபீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி சமீபத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். ‘ஷீரடி சாய்பாபா வழிபாட்டுக்கு உரியவர் அல்ல. இந்து தெய்வங்களுக்கு இணையாக சாய்பாபாவை வழிபடுவது தவறு. அவரது சிலை மற்றும் படங்களை கோயில்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதை எதிர்த்து சாய்பாபா அறக்கட்டளை சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. சாய்பாபா கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில் களை நிர்வகித்து வரும் இந்த அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப் பதாவது:-

துவாரகாபீட சங்கராச் சாரியார் சுவாமி ஸ்வரூ பானந்த சரஸ்வதி, சாய்பாபா வுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான சாய் பாபா பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது. அவதூறான கருத்துகளை வெளியிட அவருக்கு தடை விதிக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். சாய்பாபா சிலை களை கோயில்களில் இருந்து அகற்ற தடை விதிக்க வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசா ரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், சாய்பாபா பக்தர்கள் விரும்பினால், வழிபடும் உரிமைக்கு இடையூறு விளை விப்பதாகக் கூறி, சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்