முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் கொள்முதலை அதிகரிக்க அமைச்சர் ஆலோசனை

புதன்கிழமை, 15 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை: அக். 16 -  தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பால்வளத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பால் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி. வி.. ரமணா  தலைமையில்  நேற்று (15.10.14அன்று)  மாதவரம் பால் பண்ணை பால் வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் பால்வளத்திட்டங்களை செயல்படுத்துவது, பால் கொள்முதல்,  மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது சம்பந்தமாக மாவட்ட ஒன்றியங்களின்  பொது மேலாளர்கள் மற்றும் துணைப்பதிவாளர்கள் (பால்வளம்) ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  பால் வளத் துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர்  சுனீல் பாலீவால்,முன்னிலை வகித்தார்.
  இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் கூறியதாவது:
  தமிழகத்தை, பால் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழச் செய்யவும், இரண்டாவது வெண்மைப்புரட்சியை ஏற்படுத்தவும்  தமிழக அரசால் பல்வேறு பால் வளத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இத்திட்டங்களை குறித்த காலங்களில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், பால் கொள்முதலை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இல்லாத இடங்களில் புதிய பால் உற்பத்தியாளர்கள்  சங்கங்கள் அமைக்கவும், மேலும், செயல்படாத சங்கங்களை புதுப்பிக்கவும் தக்க நடவடிக்கைக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
 மேலும், கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு ஆவின் நிறுவனம் அளித்து வரும் மருத்துவ வசதி, செயற்கை முறை கருவூட்டல் மற்றும் கால் நடை தீவனம் அளிப்பது ஆகியவை குறித்த தகவல்களை களப் பணியாளர்கள், பால்  உற்பத்தியாளர்களுக்கு தெரிவித்து அவர்களை கூட்டுறவு சங்கங்களுக்கு அதிக அளவில் பால் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் குறித்த காலத்தில் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை  அமைச்சர் கூறினார்.
 
 பால் டேங்கர்களில்  கலப்படம் செய்வதைத் தடுக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.  ஆவின் நிறுவனம் உயர் அதிகாரிகள் அடங்கிய சோதனை குழுக்களை அமைத்து திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.  பால் எடுத்து வரும் வாகனங்கள் வரும் வழியில் சோதனை செய்யப்படுகிறது.  மேலும், பால் டேங்கர்களில் புதிய முறையிலான முத்திரைகளை பயன்படுத்துவது   மற்றும் ஜி.பி.ஆர்.எஸ்.  கருவிகள் பொருத்துவது ஆகியவைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டு இதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறித்தினார்.
ஆவின் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க ஆவின் பாலகங்கள் நுகர்வோர்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

  இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் இணை நிர்வாக இயக்குநர் ஆர்.கஜலட்சுமி,., துணை பால் ஆணையர் எஸ்.துரைசாமி, பொது மேலாளர் (பணிக்குழு) பி. பிரபாகர், கூடுதல் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார்,   பொதுமேலாளர் (திட்டம்) சி.லோகிதாஸ் மற்றும் ஆவின்  அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்