முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.எல்.வி-சி26 இன்று விண்ணில் பாய்கிறது

புதன்கிழமை, 15 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை, அக்.16 - இந்தியாவின் 3-வது நேவிகேஷன் ஐஆர்என்எஸ்எஸ் -1சி செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி -சி26 ராக்கெட் இன்று காலை 1.32 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்தியாவின் பிராந்திய நேவிகேஷன் செயற்கைக் கோள் திட்டத்தின்படி மொத்தம் 7 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. ஏற்கெனவே 2 செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், மூன்றாவதாக ஐஆர்என்எஸ்எஸ் -1சி நேவிகேஷன் செயற்கைகோள் இன்று அதிகாலை 1.32 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைகோள் கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை, வாகனங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிக் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி காலை 6.32 மணிக்கு 67 மணி நேரகவுன்ட்டவுன் தொடங்கியது.

இந்த செயற்கைகோளை ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா முதலாவது தளத்தில் இருந்து ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பிஎஸ்எல்வி -சி26 செயற்கை கோள் எக்ஸ் எல் வகையை சேர்ந்ததாகும். ஏற்கெனவே எக்ஸ்எல் வகையி சந்திராயன் உள்பட 6 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐஆர்எஸ்எஸ் -1சி செயற்கோள் புவி வட்ட பாதையில் குறைந்த பட்சம் 284 கிமீ.ரும் அதிகபட்சமாக20,650 கி.மீ.ரில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் எடை 1425.4 கிலோ ஆகும். இதன் மொத்த ஆயுள் காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. நான்காவது கட்ட நிலையில் செலுத்த இருக்கின்ற முக்கிய கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. திட்டமிட்டப்படி இன்று காலை 1.32 மணியிலிருந்து 1.47 மணிக்குள் பிஎஸ்எல்வி சி26 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்