முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியை இழுக்கும் பா.ஜ-வின் ஆசை: வீரமணி கிண்டல்

வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.17 - ரஜினியை கட்சியில் சேர்க்க அழைப்பு விடுத்து தமிழகத்தில் காலூன்ற முயலும் பாஜகவின் ஆசை வெட்கமறியாதது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கையில்,

சுப்பிரமணிய சுவாமிகளின் கற்பனைக் கனவுகளும் ஒருபுறம். மறுபுறம் சினிமா நடிகர்களுக்கு பா.ஜ.க.வின் அழைப்புக்குமேல் அழைப்பு. ஆசை வெட்கமறியாது என்பதற்கேற்ப, பா.ஜ.க. எப்படி தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முனைந்து, இப்போது சினிமா ரசிகர் மன்றத்தின் மற்றொரு அங்கமாகத் தன்னை மாற்றிக்கொண்டு கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும்
திட்டமிட்ட ‘அதிபுத்திசாலியாக' மாறிடத் துடியாய்த் துடிக்கிறது!

இதற்கெல்லாம் பலியாகாத இளைஞர்கள், திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ள வீரமணி இறுதியில் சிரிப்பவர் யார்? இறுதியில் சிரிப்பவர்தானே அறிவாளி? இடையில் இப்படிப்பட்ட காட்சிகளும், நகைச்சுவைக்குப் பயன்படுமே தவிர, நாடாள ஒருபோதும் கைகொடுக்காது. காலம் புரிய வைக்கக் காத்திருக்கிறது.

என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்