முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாஜ்மஹால் அருகே சிற்றுண்டியகம்: பெண்கள் தொடங்கினர்

வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 17 - அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது மனம் தளர்ந்து விடாமல் ஒன்று சேர்ந்து உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் அருகே சிற்றுண்டியகம் தொடங்கியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தாஜ்மஹால் எதிரே உள்ள பதேஹாபாத் சாலையில் இந்த சிற்றுண்டியகம் தொடங்கப்பட்டுள்ளது. இதை சான்வ் என்ற தொண்டு அமைப்பு அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களோடு இணைந்து தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் உறுப்பினர் ஆஷிஸ் சுக்லா கூறுகையில், அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏராளமான கனவுகள் இருந்திருக்கும். ஆனால் அமிலவீச்சால் அது தகர்ந்து விட்டது. தங்களது கனவுகளை நிறைவேற்றி கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம் என்றார்.

அமில வீச்சில் பாதிக்கப்பட்ட நீத்து என்பவருக்காக தொடங்கப்பட்ட இணையதளத்தின் மூலம் திரட்டப்பட்ட ரூ. 3 லட்சம் நிதியை கொண்டு சிற்றுண்டியகத்தை தொடங்கியுள்ளனர். இதில் நீத்துவும், உள்ளூரில் அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களும் பணியாற்றி வருகின்றனர். ஆக்ராவை தொடர்ந்து டெல்லி, கான்பூர், லூதியானா ஆகிய இடங்களிலும் இது போல சிற்றுண்டிகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் சமுதாய வானொலியை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அமில வீச்சில் பாதிக்கப்பட்டோரை கொண்டு புகைப்பட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் அமில வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி, ரூபா, ரீத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது போல அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ராகுல் சஹாரன் என்பவர் குறும்படம் ஒன்றையும் எடுத்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்