முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பண விவரத்தை வழங்குவோம்: சுவிட்சர்லாந்து

வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, அக் 17 - சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணம் தொடர்பான விவரங்களை குறிப்பிட்ட கால வரம்புக்குள் வழங்குவோம் என்று அந்நாட்டு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்திய வருவாய்த்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இக்குழுவினர் சுவிட்சர்லாந்து சென்றனர். அந்நாட்டின் சர்வதேச நிதித்துறை செயலர் ஜாக்கீஸ் டி வாட்டர்வில்லியுடன் சக்திகாந்த தாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான வரி, பொருளாதார விவகாரங்கள், சர்வதேச வரி விதிப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சர்வதேச தரத்திலான தகவல் பரிமாற்றங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இதையடுத்து சந்திப்பின் முக்கிய நோக்கமான சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணம் குறித்து விவாதிக்கப்பட்டது. அச்சமயம் இந்தியா கோரியுள்ள தகவல்கள் குறித்து மிகவும் கவனமாக பரிசீலித்து வருவதாகவும் அதே நேரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் விதிமுறைகளுக்கு உட்பட்டே சில தகவல்களை அளிக்க முடியும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் உறுதியளித்தனர். இரு நாட்டு அதிகாரிகளின் சந்திப்பு குறித்து சுவிட்சர்லாந்து வரி நிர்வாக இயக்குனர் ஆட்ரியன் ஹக் கூறுகையில், இந்திய அரசு கோரியுள்ள வங்கி கணக்கு ஆவணங்கள் மற்றும் அதன் விவரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட கால வரம்புக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும். விவரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் எங்கள் நாட்டு அரசு துணை புரியும். குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஆவணங்களை வழங்க இயலாவிட்டால் அதற்கான காரணமும் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார். முன்னதாக சுவிட்சர்லாந்து அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் அந்நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தின் மதிப்பு ரூ. 14 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்