முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய் கிரகத்தில் தங்க 6 பேருக்கு பயிற்சி

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக்.18 - அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எண்டீவர் உள்பட ஆள்ளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலபரப்பு, தட்ப வெப்பநிலை போன்றவற்றை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது.

இந்த நிலையில் வருகிற 2030-ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கு தங்க வைக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இப்பயிற்சி 3 கட்டங்கலாக நடைபெறுகிறது. இதற்காக ஹவாய் தீவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விசேஷ கூண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அது 36 அடி அகலமும், 2 அடுக்கு மாடிகளையும் கொண்டது. அதில் 3 ஆண்கள், 3பெண்கள் என 6 பேர் பயிற்சி பெருகின்றனர்.

அவர்களின் பயிற்சி நேற்று முன் தினம் தொடங்கியது. அங்கு அவர்களுக்கு தனித்தனி ஆறு சிறிய படுக்கையறைகள் உள்ளன. மேலும் அவர்கள் அங்கு தங்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடல் பயிற்சி மேற்கொள்ள சைக்கில், திரெட்மீல் எந்திரம் உள்ளன. தங்கியிருக்கும் 6 பேருக்கும் நாளொன்றுக்கு 8 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்து தான் அவர்கள் குடிக்க, குளிக்க, சமைக்க மற்றும் உடைகளை சுத்தம் செய்ய போன்ற அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.

மேலும் அவர்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஈமேல் அனுப்பும் வசதியும் உள்ளது. ஆனால் அந்த செய்தி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் கிடைக்கும். அதே நேரத்தில் வேலையில் இருந்து அனுப்பும் ஈமேல் சென்றடைய 40 நிமிட நேரமாகும். செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பும் தகவல்கள் கிடைக்க மேற்கண்ட நேரமாகும் என்பதால் அதே போன்று இங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியின் மூலம் செவ்வாய் கிரகத்தில் மணிதர்கள் வாழ முடியுமா என்று அறிய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்