முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவில் - யஸ்வந்த்பூருக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக் 19 - தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நாகர்கோவிலில் இருந்து யஸ்வந்த்பூருக்கும், யஸ்வந்த்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும் மேலும் ஒரு சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் யஸ்வந்த்பூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில்(எண்: 06598) யஸ்வந்த்பூரில் இருந்து அக்டோபர் 25ம் தேதி புறப்படும். மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். கிருஷ்ணராஜபுரம், பங்கார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் ரயில் நிற்கும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - யஸ்வந்த்பூர் ரயில் (எண்: 06599) நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 26ம் தேதி மாலை 4.40 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8 மணிக்கு யஸ்வந்த்பூர் சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய இடங்களில் நிற்கும். இரு ரயில்களிலும் தலா ஒரு ஏசி இரண்டு அடுக்கு படுக்கை பெட்டி, ஒரு ஏசி 3 அடுக்கு படுக்கை பெட்டி, 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இரு ரயில்களுக்கும் அக்டோபர் 17ம் தேதிக்கு முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் - யஸ்வந்த்பூர் இடையே அக்டோபர் 21, 22ம் தேதிகளில் சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago