முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பணம்: தகவல்களை வழங்க சுவிஸ் அரசு ஒப்புதல்

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, அக் 19 - சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்பு பணம் குறித்த தகவல்களை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது,

எச்எஸ்பிசி வங்கியிலும், வரி விதிப்பு குறைவான லீக்டென்ஸ்டீன் நாட்டிலும் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த விஷயத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தவிர இந்தியர்கள் வெளிநாடுகளில் வைத்துள்ள வங்கி கணக்குகள் தொடர்பாக நமது புலனாய்வு அமைப்புகள் திரட்டியுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையை சுவிஸ் அரசு உறுதிப்படுத்தும். வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணம் தொடர்பான விவரங்களை பகிரங்கமாக வெளியிட முடியாமல் இருப்பதற்கு 1995ல் அப்போதைய காங்கிரஸ் அரசு ஜெர்மனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் காரணம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்