முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாகப்பட்டின விமான நிலைய சேவை மீண்டும் தொடக்கம்

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 19 - புயல் காரணமாக மூடப்பட்ட விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பயணிகள் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.

ஹூட்ஹூ ட் புயல் கடந்த 12ம் தேதி ஆந்திராவுக்கும், ஒடிசாவுக்கும் இடையே கரையை கடந்தது. இதில் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம், கோதாவரி மாவட்டங்கள் ஆகியவை கடும் சேதத்துக்கு உள்ளாகின. புயலால் மிகுந்த பொருட்சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயலால் பஸ் போக்குவரத்து மட்டுமின்றி விமான சேவையும் பாதிப்புக்குள்ளானது. விசாகப்பட்டினம் விமான நிலையமும் புயலால் சேதமடைந்தது. இதனால் பயணிகளுக்கான விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய விமான படை விமானங்கள் மூ லம் இங்கிருந்து உணவு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் புயலால் சேதமடைந்த விமான நிலையத்தை சீர் செய்யும் பணி நடைபெற்றது. விமான நிலையத்தில் சேதமடைந்திருந்த மேற்கூரை சரி செய்யப்பட்டது. நுழைவுவாயில், உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. எக்ஸ்ரே மிஷின்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை சரி செய்யப்பட்டன. விமான நிலைய பகுதிகள் சீரமைக்கப்பட்டதையடுத்து நேற்று முதல் பயணிகளுக்கான விமான சேவை தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்