முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி நெரிசலை குறைக்க இன்று முதல் கூடுதல் சிறப்பு பஸ்கள்

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.19 - தீபாவளி பண்டிகையை யொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

முதல் நாளான நேற்று முன் தினம் 501 பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. அதற்கு முக்கிய காரணம் தீபாவளி பண்டிகை வாரத்தின் இடைப்பட்ட நாளான புதன் கிழமை வருகிறது. வேலை பார்ப்பவர்கள் பண்டிகை முடிந்து 2 நாட்கள் லீவு போட்டால் ஊரில் 5 நாட்கள் சந்தோசமாக இருந்து வருவார்கள். எனவே தான் நேற்று முன் தினம் கூட்டம் அலை மோதவில்லை.

நேற்றும் 501 பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்றும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இன்று முதல் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே இன்று 699 பஸ்கள், 20-ந் தேதி 1400 பஸ்கள், 21-ந் தேதி 1652 பஸ்கள் இயக்கப்படுகிறது.

திங்கள் மற்றும் செவ்வாய் இரவில்தான். வழக்கமான பண்டிகை கால நெரிசலை பேருந்து நிலையத்தில் பார்க்கமுடியும். அதை சமாளிக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago