முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் தரிசனம்: இணையதள முன்பதிவு தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, அக் 20 - சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிகழாண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சாமி தரிசனத்துக்கான இணையதள முன்பதிவு தொடங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை தரிசனம் செய்ய விரும்புவோர் www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களின் வசதிக்காக 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அட்வான்ஸ் கியூ பிளேஸ்மெண்ட் கூப்பன் திட்டம் நிகழாண்டும் விர்ச்சுவல் கியூ கூப்பன் என்ற பெயரில் தொடர்கிறது. நிகழாண்டு நவம்பர் 16ம் தேதி தொடங்கும் மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதியுடன் முடிவடைகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளான நவம்பர் 16 முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கும். ஆண்டுக்கு ஆண்டு சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரி்த்து வருகிறது. இதனால் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்ப்பதற்காக 2011ம் ஆண்டு கேரள மாநில காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டதே அட்வான்ஸ் கியூ பிளேஸ்மெண்ட் கூ ப்பன் அல்லது வெர்ச்சுவல் கியூ கூ ப்பன் திட்டம். இப்போதைக்கு நவம்பர் 30ம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். கார்த்திகை மாதம் நெருங்கும் போது முன்பதிவு நாள்கள் அதிகரிக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் www.Sabarimalaq.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்களுடைய பெயர், முகவரியோடு புகைப்படத்தையும் வெர்ச்சுவல் கியூ கூ ப்பன் திட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஏதாவது ஒரு அடையாள அட்டை பதிவு செய்த பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பா செல்ல வேண்டும். அங்கு இதற்கான சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருக்கும். அங்கு பக்தர்கள் கொண்டு செல்லும் கூ ப்பன், அடையாள அட்டையை சோதனை செய்த பின்பு பக்தர்களை பம்பாவில் இருந்து மலை ஏறுவதற்கு அனுமதிப்பர். கூ ப்பனில் பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கு 30 நிமிஷத்துக்கு முன்பாக சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் பதினெட்டாம் படியை ஏறி சாமி தரிசனம் செய்து விடலாம். இந்த கூ ப்பன் வசதி மூலம் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை முன்பதிவு வசதியை பெறலாம். மேலும் இந்த தி்டடத்தின் மூ லம் ஒரு மணி நேரத்தில் 600 முதல் ஆயிரம் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யலாம். இந்த திட்டத்துக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது சிறப்பம்சம். கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் மகரவிளக்கு பூஜை வரை இணையதள முன்பதிவு திட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை 0471 3243000, 3244000, 324 5000 ஆகிய அவசர உதவி எண்கள் மூ லம் அறிந்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்