முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: அணைகளில் நீர் மட்டம் உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை, அக் 20 - மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை நீடிப்பதால் பாபநாசம் அணை மூடப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி பாபநாசம் அணையில் அதிகபட்சமாக 133 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 65 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 74.8 மி.மீ மழையும் பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2,760.88 கனஅடியும், மணிமுத்தாறுஅணைக்கு 775 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 4.60 அடி உயர்ந்து 67.65 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 3.28 அடி உயர்ந்து 78.94 அடியாகவும் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 56.20 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அருவி, பாபநாசம், பாணதீ ர்த்த அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்