முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் பங்கஜா முண்டே புதிய முதல்வர்?

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக் 20 - மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. சிவசேனாவுடன் சேர்ந்து பாஜக கூட்டணி மந்திரிசபை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி மந்திரி சபை அமைந்தாலும் முதல்வர் பதவியை பாஜக தக்க வைத்து கொள்ளும். இதனால் மராட்டிய மாநில பாஜக தலைவர்களிடம் முதல்வர் பதவியை பெற இப்போதே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தால் மத்திய மந்திரி நிதின் கட்காரி புதிய முதல் மந்திரியாக இருப்பார். ஆனால் தற்போது அந்த கதவு அடைக்கப்பட்டு விட்டது. இதையடுத்து புதிய முதல்வராக யார் பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான போட்டியில் பங்கஜா முண்டே, தேவேந்திர பட் நவீஸ், ஏக்நாத் கட்சே ஆகிய 3 பேரும் தீவிரமாக உள்ளனர். இவர்களில் பங்கஜா முண்டே முன்னணியில் உள்ளார். இளம்பெண்ணான அவர் பார்லி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மறைந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளான இவருக்கு கட்சியிலும் அதிக ஆதரவு உள்ளது. ஆனால் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் பட்சத்தில் இவர் அவர்களை சமாளிப்பாரா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் மராட்டிய முதல்வராக யாரை தேர்வு செய்வது என்று மேலிட தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago