முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் பாஜக ஆட்சி - மராட்டியத்தில் இழுபறி

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 20 - மகராஷ்டிரம் மற்றும் அரியானா மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இவற்றில் அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது. மராட்டியத்தில் மட்டும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 288 இடங்களில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி பாஜக 122 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 2 மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

மராட்டியத்தில் 288 தொகுதிகளுக்கும், அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 15 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மராட்டிய மாநிலத்தில் இம்முறை 5 முனைப்போட்டி ஏற்பட்டது. பாஜக, சிவசேனா கூட்டணி முறிந்ததை அடுத்து இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. அதே போல காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்து போன பிறகு இரண்டு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன. இந்த கட்சிகள் தவிர ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மான் சேனா கட்சியும் வரிந்து கட்டிக் கொண்டு தனித்து போட்டியிட்டது. இப்படி 5 கட்சிகள் தனித்து போட்டியிட்டதால் அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்து விட்டது. பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி பாஜக 122 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 42 இடங்களை கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. இதன் கூட்டணி கட்சியாக இருந்து தற்போது தனித்து போட்டியிட்ட சரத்பவார் கட்சி 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா கட்சிக்கு இந்த தேர்தலில் 63 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைத்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் உத்தவ்தாக்கரே. ஆனால் அவரது கனவும் பலிக்கவில்லை. நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கனவும் பலிக்கவில்லை. குறிப்பாக ராஜ்தாக்கரே கட்சி ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்று மண்ணை கவ்வியிருக்கிறது. ஆட்சி அமைப்பதற்கு 145 இடங்கள் தேவை. ஆனால் பாஜகவுக்கு 122 இடங்கள் மட்டுமே கிடைத்திருப்பதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கட்சிக்கு பவார் கட்சி ஆதரவு அளிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரியானா மாநிலத்தை பொறுத்தவரை மொத்தம் 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இவற்றில் 47 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் இருந்தாலே போதும். ஆனால் பாஜக 47 இடங்களில் வென்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 15 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார் மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா. லோக்தள் கட்சிக்கு வெறும் 19 இடங்களே கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி இரு மாநிலங்களிலுமே தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகும். இந்த இரண்டு மாநில தேர்தலிலும் 2302 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இவர்களில் 12 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மீதியுள்ள 2290 சுயேட்சை வேட்பாளர்களும் இந்த தேர்தலில் தோல்வி அடைந்து மண்ணை கவ்வியிருக்கிறார்கள். இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றிருப்பது அக்கட்சி தலைவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் தலைவர்களோ சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago