முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2 முறை தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

ஜம்மு,அக்.20 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் 2 முறை தாக்குதல் நடத்தியது.

பாகஸ்தான் ராணுவமானது கடந்த ஒரு மாதத்திற்கும் மே லாக தொடர்ந்து எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனால் எல்லையையொட்டியுள்ள இந்திய கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான அடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 36 மணி நேரத்தில் இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பூஞ்ச் மாவட்டம் ஹமிர்புர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.55 மணிக்கு இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக, தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த மோதல் 9.20 வரை நீடித்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஜம்மு மாவட்டம் மக்வல் மற்றும் அல்லா மாஹி தா கோதே பகுதியில் உள்ள எல்லை தூண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது" என்றார். முன்னதாக, வியாழக்கிழமை இரவு, வெள்ளிக்கிழமை காலை என 2 முறை ஹமிர்புர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் 24 மணி நேரத்தில் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்