முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுடனான கிரிக்கெட் தொடரை நிறுத்தி வைக்க திட்டம்?

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, அக்.20 - இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி திடீரென விலகியதால் கடும் கோபமடைந்துள்ள பிசிசிஐ, அந்நாட்டு அணியுடனான கிரிக்கெட் தொடரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தப்படி வீரர்களுக்கு 75 சதவீதம் ஊதிய குறைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் தர்மசாலாவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியோடு இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்துவிட்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி நாடு திரும்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடும் கோபமடைந்த பிசிசிஐ வரும் 21-ம் தேதி செயற்குழுவை கூட்டியுள்ளது. ஹைதராபாதில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது மேற்கிந்தியத் தீவுகள் வாரியம் மற்றும் வீரர்கள் மீதான நடவடிக்கை, தொடரை ரத்து செய்ததால் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடு கோருவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. தொடரை பாதியிலேயே ரத்து செய்து பிசிசிஐக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வாரியத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுடனான கிரிக்கெட் தொடருக்கு தடை விதிப்பதோடு மட்டுமின்றி அந்நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கும் தடை விதிக்க பிசிசிஐ நிர்வாகிகள் விரும்புவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் வீரர்கள் மீது தவறில்லை. அவர்களை தண்டிக்கக்கூடாது என சில நிர்வாகிகள் கருதுவதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், "இந்தியாவுடனான தொடரை பாதியிலேயே ரத்து செய்வது என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவால் நாங்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கிறோம். இந்த விவகாரத்தை ஐசிசியிடம் எடுத்துச் சென்று எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுமாறு கோரிக்கை விடுக்கப் போகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ செயற்குழுவில் விவாதிக்கப்படவுள்ளது. அப்போது மேற்கிந்தியத் தீவுகளுடனான கிரிக்கெட் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்