முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை: மத்திய அரசுக்கு சரத்குமார் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.20 - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு டீசல் விலையை வெறும் 3 ரூபாய் 65 பைசா அளவுக்கு குறைத்திருப்பது மக்கள் விரோத செயலாகும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்து வருவதை சுட்டிக் காட்டி, சில தினங்களுக்கு முன் டீசலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். கடந்த வாரத்திலிருந்து கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்து இருக்கிறது.

கச்சா எண்ணெயின் விலை உயரும் போது. அந்த சுமையை பொதுமக்கள் தலையில் சுமத்தும் போது விலை குறையும் போது அதன் பலனை பொதுமக்களுக்கு அளிப்பது நியாயமானதாக இருக்கும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்யலாம் என்று அதிகாரத்தை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று பாஜ கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.

இப்போது, டீசல் விலையை உயர்த்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சரத்குமார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்