முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் நவ-24ல் தொடக்கம்

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 22 - பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 24ம் தேதி தொடங்கி சுமார் ஒரு மாத காலத்துக்கு நடைபெறலாம் என தெரிகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த கூட்ட தொடருக்கான அட்டவணை முடிவு செய்யப்பட இருக்கிறது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில்,

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகார துறைக்கான அமைச்சரவை குழு டெல்லியில் நேற்று கூடியது. அப்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான அட்டவணையை இறுதி செய்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தனது பரிந்துரையை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பொதுவாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 23ம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். நாடாளுமன்ற விவகாரத்துறைக்கான அமைச்சரவை குழுவி்ல் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ரசாயன, உரத்துறை அமைச்சர் அனந்த்குமார், நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, நாடாளுமன்ற விவகார துறை இணையமைச்சர்கள் பிரகாஷ் ஜவ்டேகர், சந்தோஷ் சங்க்வார் ஆகியோர் சிறப்பு உறுப்பினர்களாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்