முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா நிதி ஊழல்: சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      ஊழல்
Image Unavailable

 

கொல்கத்தா, அக் 21 - சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அரசியல் செல்வாக்கு பெற்ற இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாவது,

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கி 4 மாதங்கள் ஆகியுள்ளன. இந்த காலக்கட்டத்தில் மோசடியில் தொடர்புடையதாக கருதப்படும் பல நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த மோசடியில் முக்கிய சதி செயல்களில் ஈடுபட்ட இரண்டு அரசியல் செல்வாக்கு உள்ள நபர்கள் குறித்த தகவல்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அவர்களிடம் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தும் முற்றிலும் உண்மையானது என கூற முடியாது.

அவற்றின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்படும். இந்த சூழலில் சாரதா சுற்றுலா போக்குவரத்து நிறுவனத்துக்கு எதிரான தனது முதல் குற்றப்பத்திரிகையை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாரதா நிதி நிறுவன தலைவர் சுதிப்தாசென்னுக்கு சொந்தமான நில ஆவணங்கள் குறித்த விவரங்களை வழங்குவதில் மேற்கு வங்க அரசு சுணக்கம் காட்டி வருகிறது. இதுவரை சிபிஐக்கு மிக குறைந்த ஆவணங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. இதன் காரணமாக விசாரணையும் தாமதமாகிறது என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு இயங்கிய சாரதா நிதி நிறுவனம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தது. சலுகைகள், பரிசு பொருட்கள் வழங்குவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை இந்நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அதன் நிறுவன தலைவர் சுதிப்தா சென் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இது தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்