முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க படை தாக்குதல்: எண்ணெய் கிணறுகள் அழிப்பு

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக் 21 - ஈராக், சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் கடுமையான தாக்குதலில் 12 எண்ணெய் கிணறுகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு துறை தலைமையகம் சார்பில் வாஷிங்டனில் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் வட கிழக்கு ஈராக், கிழக்கு சிரியா ஆகிய இடங்களில் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் 15 தாக்குதல்கள் நிகழ்த்தின. இவற்றில் 12 தாக்குதல்கள் எண்ணெய் கிணறுகள் மீது நிகழ்த்தப்பட்டன. எண்ணெய் கிடங்குகள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடங்கள் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலை, வாகனங்கள் அழிக்கப்பட்டன. திபான் பகுதியில் 7 தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அந்த பகுதியில் எண்ணெய் கிணறுகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அழிக்கப்பட்டன. தெயிர் எஸ்ஸோர் பகுதியில் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள 5 எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டன. சிரியாவில் கொபானே நகர் அருகே ஐ.எஸ். நிலைகள் மீது கூட்டுப்படையினர் 5 முறை விமான தாக்குதல்களை நிகழ்த்தினர். ஈராக்கில் ஐ.எஸ். நிலைகளை குறி வைத்து 5 தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய ஆயுதமேந்திய வாகனங்கள், பீரங்கிகள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள் பயன்படுத்திய கட்டிடம், பதுங்கு குழிகள் ஆகியவையும் அழிக்கப்பட்டன என்று அமெரிக்க பாதுகாப்பு துறை தலைமையகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவி்ன் மிக அதிகமான எண்ணெய் வளமுள்ள பகுதிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ளன. இங்கிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 3 மில்லியன் டாலர் சம்பாதித்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்