முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் ஜாட் இனத்தவருக்கு முதல்வர் வாய்ப்பு

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

சண்டிகர், அக் 21 - அரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜ 47 இடங்களை கைப்பற்றி மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. இங்கு முதன் முறையாக ஜாட் அல்லாதவருக்கு முதல்வர் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.

அரியானா சட்டமன்ற தேர்தலில் கடந்த 15ம் தேதி பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பாஜ 47 ஐ கைப்பற்றி மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜ மேலிட பார்வையாளர்கள் விரைந்துள்ளனர். ஆட்சி அமைப்பது குறித்து மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் பாஜ பெரும்பாலும் ஜாட் அல்லாதவரின் வாக்குகளை குறி வைத்தே தனது வியூகத்தை வகுத்தது. இதில் வெற்றியும் பெற்றுள்ளது. முதல்வர் யார் என்பது குறித்து பாஜ இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்ற போதிலும் அனேகமாக ஜாட் அல்லாதவர்களுக்கே வாய்ப்பு வழங்க பாஜ விரும்புகிறது என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது. கேப்டன் அபிமன்யு சிங்குக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் ஹூடா மற்றும் முன்னாள் முதல்வர் சவுதாலா ஆகியோர் ஜாட் ஓட்டுகளை பிரித்தனர். இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. சவுதாலாவின் ஐஎன்எல்டி 19 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் வந்துள்ளது. மகராஷ்டிராவை போலவே அரியானாவிலும் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு எதிரான அலையை சவுதாலாவின் கட்சி தனக்கு சாதகமாக வெற்றிகரமாக திருப்ப முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது. மேலும் ஊழல் வழக்கில் சிக்கி அவர் சிறையில் அடைக்கப்பட்டதும் அவரது கட்சிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. ஆட்சியமைப்பது தொடர்பாக அரியானாவில் தேர்வு செய்யப்பட்ட பாஜ உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேலிட பார்வையாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தினேஷ் சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முறை பாஜ வரலாறு காணாத வகையில் மெஜாரிட்டி இடங்களை கைப்பற்றி முதன் முறையாக அரியானாவில் தனியாக ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்